குரோமோசோம்கள் மரபணுக்களைச் சுமந்திருக்கும்.
பாரம்பரியத்தின் அடிப்படையை காட்டியதன் மூலம், கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஹண்ட் மோர்கன் மற்றும் அவரது மாணவர்கள் நவீன மரபியல் காலத்தை வழிநடத்த உதவினர். மெண்டல் பட்டாணி தாவரங்களின் இனப்பெருக்கம் பற்றி ஆராய்ந்தார், கொலம்பியா குழுவோ பழ-ஈயில் உள்ள பாரம்பரியத்தைப் படித்தனர். மெண்டலைப் போல சுலபமாக பண்புகளைக் கண்டறியாமல், அவர்கள் தனிப்பட்ட பண்பினையுடைய ஈக்களைத் தேட பல மாதங்களை செலவழித்தனர். இறுதியாக அவர்கள் சிவப்பு கண்களுடைய ஈக்களின் நடுவே ஒரு வெள்ளை கண்களுடைய ஆண் ஈயை கண்டுபிடித்தனர். மரபுப்பிறழ்ந்த ஆண்-ஈவிற்கும், ஒரு சிவப்பு கண்களுடைய பெண்-ஈவிற்கும் இடையே ஒரு சேர்க்கை நிகழிம் மட்டுமே சிவப்பு கண்களுடைய ஈக்களே உருவானது. ஒடுங்கிய பண்பின் விதிப்படி, பின்வரும் தலைமுறைகளில் வெள்ளை கண்களுடைய ஈக்கள் தோன்றின. எனினும், இரண்டாவது தலைமுறையில் வெள்ளை கண்கள் ஆண் ஈக்களிடையே தான் பிரத்தியேகமாக காணப்பட்டது. எனவே வெள்ளை கண் பண்பானது ஒரு பாலியல்-தொடர்பான ஒடுங்கியப் பண்பு என்று தீர்மானித்தனர். கண் நிறத்திற்குரிய மரபணுக்கள் X-குரோமோசோமில் தான் அமைந்துள்ள என முடிவுக்கு வந்தனர்.