குரோமோசோம் துண்டுகளின் பரிமாற்றம் நிகழும் போது மரபணுக்கள் சிறிது மாற்றியமைக்கப்படுகின்றன.
மோர்கன் மற்றும் அவரது சக பணியாளர்கள், பழ-ஈக்களிக்கிடையே மேலும் மேலும் பாரம்பரிய பண்புகளை அடையாளம் கண்டறியும் போது, பல ஈக்களிடயே குறிப்பிட்ட கலப்புடைய பண்புகள் மட்டுமே இருந்ததை கவனித்தனர். இதுவே, குறிப்பிட்ட மரபணுக்கள் இணைந்து-தொகுக்கப்பட்டு ஒன்றாகவே பாரம்பரியத்தில் வரும் என்று கூற உதவியது. உருபெருக்கியில் கவனித்தப் போது, அம்மாதிரியான நான்கு "இணைப்பு குழுக்கள்" – ஜோடி குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஒத்திருந்தது. இதுவே, மரபணுக்கள் குரோமோசோம்களில் தான் அமைந்துள்ளன என்பதற்கு சான்றளித்தது. மோர்கன் குழு பழ-ஈக்களுடைய குரோமோசோம்களை வரையரைப்படுத்த இணைப்புக் கோட்பாட்டை பயன்படுத்தினர். சில நேரங்களில், ஒத்த குரோமோசோம்களின் ஒடுக்கற்பிரிவின் போது நிகழும் துண்டுகள் பரிமாற்றத்தின் விளைவாக "இணைப்பு" மரபணுக்கள் பிரிவதைப் பார்த்தனர். இணைத் துண்டித்தலின் விகிதமே அம்மரபணுக்களுக்கிடையேயான தூரத்தைக் குறிக்கும் அளவு கோலாக அமைந்தது. தொலைதூர மரபணுக்கள் அடிக்கடி மறுசேர்க்கையடையும், மிக அருகில் உள்ளதோ அரிதாக மறுசேர்க்கையடையும் - ஆனால் நெருக்கமாக இணைந்திருக்கும்.