பரிணாம வளர்ச்சி மரபணு வேறுபாடுகளின் பரம்பரை உடைமையிலிருந்துத் தொடங்குகிறது.
தன்னிச்சையாக எழும் பண்புக்கூறுகளின் வேறுபாடுகளே, இயற்கை தேர்வின் மூலம் நடக்கும் பரிணாம கோட்பாட்டில், உயிர்-வாழ் திறனை ஊக்கமளிப்பதாய் இருந்தது. 1859 இல் வெளிவந்த டார்வினின் இனங்களின் தோற்றம் (On the Origin of Species) என்னும் புத்தகத்தின் விலைவாக, விஞ்ஞானிகள் வெவ்வேறு சூழல்களில் வாழும் உயிரினங்களின் பிரத்யேக குணநலன்களை படிக்க ஆய்வகங்களை ஏற்படுத்தினர். எனினும், இந்த ஆய்வு பண்புக்கூறுகளின் வேறுபாடுகள் எவ்வாறு தோன்றின என்றும், பாரம்பரியமாக அது எப்படி வந்தது என்றும் விளக்க முடியவில்லை. 20ஆம் நூற்றாண்டின் போது தான், கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் மூலம் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பரிணாமத்தை மறுதோற்றுவிப்பதைக் கருத்தில் கொண்டு, பரிணாம-வளர்ச்சியின் சோதனை என்னும் பாடப்பிரிவு ஏற்பட்டது. வெகு விரைவிலேயே பண்புக்கூறு-வேறுபாடுகளின் காரணிகள் மரபணுப்பிறழ்வு என்பது அறியப்பட்டது. புதிய மரபணுப்பிறழ்வுகளின் பாரம்பரியத்தை பகுத்தாராய மெண்டலின்-மரபியல் ஒரு புள்ளிவிவர முறையை வழங்கியது. 1920இன் ஆரம்பத்தில், பரிணாம வளர்ச்சியின் சோதனையாளர்களே முதல் தலைமுறை மரபியலாளர்களாக ஆகினர்.