மெண்டலின் விதிகள் மனிதர்களுக்குப் பொருந்தும்.

Mendelian laws apply to human beings.

ஆரம்பத்தில்,மெண்டலின் விதிகள் பட்டாணி செடிகள் மற்றும் பழ ஈக்களில் மட்டுமே சோதக்கப்பட்டிருந்தாலும், விரைவிலேயே அவை எல்லா உயிர்களிலும் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மையானது. பழ - ஈ மரபியலை புரிந்துக் கொள்ள பிறழ்வுகள் அடிப்படையாக இருந்ததுப்போல, மனிதர்களில் பரம்பரை நோய் பாதிக்கப்பட்ட குடும்ப வாரிசுகளே மெண்டலின் மரபியல் விதிகளுக்கு உதாரணங்களாயின. ஒடுங்கிய பாரம்பரியம், முதலில் ஆல்காப்டோநியூரியா (1902), வெளிறியதன்மையும் (1903) குறைபாடுகளுக்காக விவரிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட முதல் மேலாதிக்க குறைபாடுகளில் குறுகிய விரல்கள், (1905), பிறவியிலேயே கண்புரை (1906), மற்றும் ஹண்டிங்டன் கொரியா (1913) அடங்கின. டக்சென்னி தசைநார் தேய்வு (1913), சிவப்பு- பச்சை நிற குருடு (1914), மற்றும் இரத்த ஒழுக்கு (1916) ஆகியவை முதல் பாலியல் தொடர்புடைய குறைபாடுகள் ஆகும். கண் நிறம் மரபு ஆதாவது, பழுப்பு -ஆதிக்கம் , நீலம் – ஒடுங்கியது என 1907 ல் தான் வெளியிடப்பட்டது; ஆனால் இப்போது, பல மரபணுக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.