மெண்டலின் மரபியல் மூலம் மனித சுகாதாரம் மற்றும் நடத்தையை பற்றி முழுமையாக விளக்க முடியாது.
வேளாண் துறையில் மெண்டலின் விதிகளை செயல்படுத்த பலர் முன்வந்தனர். மெண்டலின் கருத்துக்கள் இனமேம்பாட்டியலுக்கான இயக்கத்தினாலும் கூட ஆதரிக்கப்பட்டது. இனமேம்பாட்டினர் "நல்ல" மரபுவழி வந்த மக்களுக்கிடையேயானத் திருமணங்களை ஊக்குவித்தும், "மரபுவழி தகுதியற்றவர்களின்" இனப்பெருக்கத்தை எதிர்த்தும் வந்தனர். இனமேம்பாட்டாளர்கள் எளிய மேலாதிக்கம் / ஒடுங்கிய மரபணு திட்டங்களை வைத்துப் பல சிக்கலான நடவடிக்கைகளையும் மற்றும் மன நோயையும் விளக்க தவறாகப் பயன்படுத்தினர். ஆனால் இப்பொழுதோ இதில் பல மரபணுக்கள் சம்மந்தப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் மனித வளர்ச்சியின் மீது சுற்றுச்சூழலினால் ஏற்படும் விளைவுகளை கவனிக்கத் தவறினர். அமெரிக்காவில், வரையறுக்கப்பட்ட இனமேம்பாட்டியலுக்கான சட்டம் அரசியல் மற்றும் சமூக பாரபட்சங்களை பிரதிபலித்ததேத் தவிர மரபியல் உண்மைகளை அல்ல. இறுதியில், நாஜி (Nazi)' யின் இன தூய்மை தேடலின் பயங்கர விளைவுகளினால், மனித வாழ்வைப் பற்றிய இனமேம்பாட்டாளர்களின் விளக்கமானது செல்வாக்கிழந்தது.