ஒரு மரபணு ஒரு புரதத்தை உருவாக்குகிறது.

One gene makes one protein.

1902ல், ஆர்ச்சிபால்ட் காரட் (Archibald Garrod) பரம்பரை நோயான 'ஆல்காப்டோநியூரியா'வானது (Alkaptonuria) வளர்சிதை மாற்றத்தில் வந்த பிழை, எனக் கருதினார். இவர், திரவ கழிவுகள் நீக்குவதற்கான உயிர்வேதியியல் பாதையில், பிறழ்வுகளினால் ஒரு குறிப்பிட்டக் குறைபாடு ஏற்படுகிறது என கூறினார். 'கருமையான சிறுநீரே' இந்நோயின் வெளிப்பாடாகும் (phenotype). இந்த கருதுகோள் 1941ல் ஜார்ஜ் பீடில் மற்றும் எட்வர்ட் டாட்டம் (George Beadle and Edward Tatum நடத்திய ரொட்டி பூஞ்சையை (Neurospora) வைத்து நடத்திய கடுமையான ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலில், கதிர்வீச்சிற்குள்ளான பூஞ்சைகள் தங்களின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உருவாக்கும் திறனை இழந்ததைக் கண்டனர்; பின்னர் பூஞ்சையின் வளர்ச்சி குறைந்து, இறுதியாக நின்றது. பின்னர், அவர்கள் பிறழ்வுற்ற பூஞ்சைகளுக்கு குறிப்பிட்ட துணை இணைப்பினை வழங்குவதன் மூலம் அதன் வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்பதைக் கண்டனர். ஒவ்வொரு பிறழ்வும், ஊட்டச்சத்தின் உற்பத்திக்கு தேவையான புரதத்தை (enzymes) செயலிழக்க செய்ய வேண்டுமென்பதை அவர்கள் விளக்கினர். எனவே, ஒரு மரபணு- ஒரு புரதத்தை உருவாக்குவதற்கான தகவலைக் கொண்டுள்ளது.