ஒரு மரபணு டிஎன்ஏ' வால் ஆனது.
1920ல், கொல்லப்பட்ட -வீரியத்தைக் கொண்ட பாக்டீரியா ஒரு வீரியமில்லா பாக்டீரியாவோடு கலந்த போது, தீங்களிக்கும் பண்பினைப் பெறுகின்றதென சோதனைகள் காட்டியது. இறந்த பாக்டீரியாவிலிருந்து வெளிவரும் இரசாயனம், வீரியமில்லா பாக்டீரியாவை வீரியமுள்ளனவாக "உருமாற்றம்" (transforms) செய்யும் இரசாயனத்தைப் போலமைந்தது. பின்னர் இந்த "மாற்றும் கொள்கை" ஓர் மரபணுவெனக் கண்டனர். 1940 ஆம் ஆண்டு, ராக்பெல்லர் நிறுவனத்தில் ஆஸ்வால்ட் ஆவெரியின் (Oswald Avery) தலைமையிலமைந்த விஞ்ஞானிகளின் குழு, தீவிரமாக இந்த சோதனைகளைத் தொடர்ந்தனர். "மாற்றும் கொள்கையினால்" வரும் தூய-சாறானது (pure extract) புரதத்தைச்-செரிக்கும் என்சைம்களால் பாதிக்கப்படாமல், டிஎன்ஏ'வை செரிக்கும் என்சைம்களால் அழிக்கப்பட்டதைக் கண்டனர். மரபணுக்கள் டிஎன்ஏ'வால் ஆனது, இந்த டிஎன்ஏ'வே "மாற்றுக் கொள்கையென" இந்த சோதனை காண்பித்தது. இருந்தாலும், பல விஞ்ஞானிகள் டிஎன்ஏ'வே மரபணு மூலக்கூறு, புரதம் இல்லை, என்ற இந்த தெளிவான ஆதாரத்தை மெதுவாகவே ஏற்றுக்கொண்டனர்.