பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலும் டிஎன்ஏ'கள் உள்ளன.
நுண்ணோக்கிகள் (microscope) ஒற்றை-அணு பாக்டீரியாயிருப்பதைக் காட்டியது. எனினும், பாக்டீரியா மரபணுக்களைக் கொண்டுள்ளதா? என்றும், அப்படி இருந்தால் அது உயர்-வாழ்வினங்களோடு எப்படி பொருந்துமென்ற? விவாதம் நீடித்தது. 1940ல் பாக்டீரியா பாலியலைக் கொண்டிருப்பது அறிந்தப் பின், இந்த விவாதம் முடிவுக்குவந்தது. இணைதலின் (conjugation) போது, ஒரு இனச்சேர்க்கை குழாயினால் (mating channel) மரபணுக்களின் பறிமாற்றம் நடக்கின்றது. எலக்ட்ரான் நுண் நோக்கியின் மூலம், பாக்டீரிய வைரஸ்கள் ஒரே செயல்முறையைத் தொடர்கின்றனர் எனக் காட்டியது. ஒரு வைரஸ், ஒரு குடியேறும் (host) பாக்டீரியமுடன் இணைந்து, தன்னுடைய மரபணுக்களை அதன் குழாய் போன்ற வால் (channel like tail) மூலமாக செலுத்துகிறது. 1952ல், ஆல்ஃபிரட் ஹெர்ஷே (Alfred Hershey) என்பவர் ஒரு பாதிக்கப்பட்ட செல்லுள் நடக்கும் புதிய வைரஸ்களின் இனப்பெருக்கத்திற்கு டிஎன்ஏ மட்டுமே காரணமெனக் காட்டினார். இது மரபணு டிஎன்ஏ'வால் ஆனது, என்ற ஆவெரியின் முந்தைய சோதனைகளுக்கு மறுக்க முடியாத ஆதரவை வழங்கியது. இதுவே வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள், உலகளாவிய மரபியல் கொள்கைகளை படிக்க மாதிரியாக பயன்படுத்த முடியும் என்பதை அறிவித்தது.