டிஎன்ஏ-மூலக்கூறு, முறுக்கப்பட்ட ஏணி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆராய்ச்சிகள் டிஎன்ஏ, நியூக்ளியோட்டைட் (nucleotide) கூறுகளினாலானது என்றும், அக்கூறுகள் ஒரு டியாக்சி ரிபோஸ் சர்க்கரை (deoxyribose sugar), ஒரு பாஸ்பேட் குழு (phosphate), மற்றும் நான்கு நைட்ரஜன் தளங்களில் (அடினைன் (A-Adenine), தைமின் (T-Thymine), குவானைன் (G-Guanine), மற்றும் சைட்டோசின் (C-Cytosine)) ஒன்றைக் கொண்டிருக்கும், என காட்டியது. அடுத்தடுத்த நியூக்ளியோடைட்டிலுள்ள பாஸ்பேட் மற்றும் சர்க்கரைக் குழுக்களின் இணைப்பு, ஒரு நீண்ட பாலிமரை உருவாக்குகின்றது. பிற முக்கிய சோதனைகளின் மூலம், A:T மற்றும் G:C இன் விகிதங்கள் அனைத்து உயிர்களிலும் நிலையாக இருப்பதைக் காண்பித்தது. X-கதிர் படிகவியல் (X-ray crystallography), டி.என்.ஏ. மூலக்கூறு ஒரு முறுக்கப்பட்ட ஏணி போன்ற வடிவத்திலுள்ள ஒரு இரட்டை சுருள், என்பதை உறுதி செய்தது. 1953 ல், இந்த துண்டுகளை ஒரு முப்பரிமாண அமைப்பில் பொருந்த வைப்பதெப்படி என்று கண்டறியும் பந்தயத்தில், இங்கிலாந்தை சார்ந்த கேம்பிரிட்ஜிலுள்ள கேவன்டிஷ் ஆய்வகத்திலுள்ள ஜேம்ஸ் வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் (James Watson and Francis Crick) வெற்றி பெற்றனர். அவர்கள் ஒன்று விட்ட டியாக்சிரைபோஸ் மற்றும் பாஸ்பேட் மூலக்கூறுகள் இணைந்து, டிஎன்ஏ ஏணியின் முறுக்கப்பட்ட மேட்டினை அமைக்கிறதெனக் காட்டினர். டிஎன்ஏ ஏணியின் படிகள், ஈடுசெய்யும் நைட்ரஜன் தள-ஜோடிகளாலானது - 'A' எப்பொழுதுமே 'T' உடனும், 'G' எப்போதுமே 'C' உடனும் ஜோடியாக இணையும்.