டிஎன்ஏ ஏணியின் ஒரு பாதி மற்றொன்றுக்கு வார்ப்புருவாகும்.
'A (அடினைன்)' ஆனது ' T (தைமின்)' யோடும், 'G (குவானைன்)' வானது 'C (சைட்டோசின்)' யோடும் தான் இணைய வேண்டும் என்ற கட்டாயமே, டிஎன்ஏ நகலின் போது, அந்த ஏணியின் ஒரு பாதி – மற்றொன்றிற்குப் பிரதிச்செய்கையென, வாட்சன் மற்றும் கிரிக்' கால் சொல்ல இயன்றது. 1958 இல் , இரண்டு ஆதாரங்கள் இதை மேன்படுத்தியது. முதலாவது, டி.என்.ஏ. பாலிமரேஸ் (DNA polymerase) என்னும் ஒரு என்சைம் (enzyme) கண்டுபிடிக்கப்பட்டது; பின்னர் அப்புரதம் ஒரு பாதி டிஎன்ஏ மூலக்கூறுகள் வழங்கிய வார்ப்புருவை (template) ஈடுசெய்யும் நியூக்ளியோடைட்களை சேர்க்கின்றது என்று அறியப்பட்டது. இரண்டாவதாக, ஒரு தனித்துவமான பரிசோதனையில் பாக்டீரியாவின் அடுத்தடுத்த தலைமுறைகளின் போது உருவாகும் புதிய டிஎன்ஏ மூலக்கூறுகளைக் கட்டமைக்க நைட்ரஜன் ஐசோடோப்புகள் (Nitrogen isotope) பயன்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு டிஎன்ஏ மூலக்கூறின் ஒரு இழை மாறாமல் தனது இரண்டு மகள் செல்களுக்கும் கடத்தப்படுகின்றது என்பதைக் காட்டியது. இந்த "பாதுகாக்கப்பட்ட" இழை ஒரு இரண்டாவது நிரப்பு இழையை உருவாக்க, டி.என்.ஏ. பாலிமரேஸ்'க்கு மாதிரியாக (template) இருக்கும் – இதன் மூலம் ஒரு புதிய டிஎன்ஏ மூலக்கூறு நிறைவடைந்தது.