ஆர்என்ஏ'வானது, டிஎன்ஏ' மற்றும் புரதத்திற்கு இடையே ஓர் பாலமாக உள்ளது.

RNA is an intermediary between DNA and protein.

டிஎன்ஏ செல்லின் உட்கருவிற்குள்ளும், ஆர்என்ஏ குழிய முதலுருவிலும் (சைட்டோப்பிலாஸம் – cytoplasm) பொதுவாக இருக்கும். இதனால், வாட்சன் மற்றும் கிரிக், ஆர்என்ஏ 'வானது உட்கருவிலிருக்கும் டிஎன்ஏ' தகவலை நகலாக்கி, புரதங்கள் தயாராகும் குழியமுதலுருவிற்குக் கடக்கும், என்று முன்மொழிந்தனர். மேலும், மரபணு குறியீட்டை படிக்க, மற்றும் ஒரு வளர்-பாலிப்பெப்டைட் (polypeptide) தொடர்ச்சிக்குரிய அமினோ அமிலங்களை (amino acids) தேர்ந்தெடுக்க, "தகவி" போன்ற கூறு வேண்டுமென கிரிக் கணித்தார். இந்த முறையில், டிஎன்ஏ' விலிருந்து ஆர்என்ஏ', மற்றும் அதிலிருந்து புரதத்திடமும், மரபணுத் தகவல்கள் செல்வதை "மையக் கொள்கை" (central dogma) என பின்னர் அறிவிக்கப்பட்டது. பல வகையான ஆர்என்ஏ' க்கள், மரபணுத் தகவல்களைப் பயன்படுத்துவதில் ஈடுப்பட்டுள்ளன. உட்கருவில், டிஎன்ஏ'வின் மரபுத் தகவலானது (தகவல்) ம-ஆர்என்ஏ (mRNA) மூலக்கூறினில் , நகல் படுத்த அல்லது எடுத்தெழுதப் படும். பின்னர் குழியமுதலுருவினுள், mRNA குறியீடுகள் அமினோ அமிலங்களாக "பெயர்க்கப்" (translation) படுகின்றது. இப்பெயர்ப்பு பரிமாற்ற ஆர்என்ஏ' (t-RNA) தகவியாக அமைந்து, ஆர்என்ஏ'களாலேயாலான ரைபோசோமால் நிகழும்.