ஆர்என்ஏ தகவல்கள் சில நேரங்களில் திருத்தியமைக்கப்படுகின்றன.
தத்துவம் மற்றும் தர்க்கத்தினால் m-ஆர்என்ஏ, டிஎன்ஏ'வின் குறியீட்டை நன்றாகப் பிரதிபலிக்கும், என்ற எண்ணம் வந்தது. m-ஆர்என்ஏ மற்றும் டிஎன்ஏ வரிசையினிடையே உள்ளப் பொதுத்துவம், பெரும்பாலும் பாக்டீரியா போன்ற செல்களில் (பிரோகேர்யாட்டுகள்) நடந்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. சில எதிர்-முடிவுகள், இனக்கலப்பு-டிஎன்ஏ (recombinant DNA) நுட்பத்தின் மூலம் உயர்-செல்களில் (யூகேர்யாட்டுகள்) நடந்த ஆராய்ச்சிகள், வெளியிட்டன. பின்னர், m-ஆர்என்ஏ, அவை நகலிக்கப்பட்ட மரபணுக்களை விட, குறைந்த அளவிலிருப்பதைக் கண்டனர். நுண்ணோக்கிகள் இந்த வேறுபாட்டை, m-ஆர்என்ஏ' யும் அதற்கு ஈடான டிஎன்ஏ'வின் இணைப்பின் போது, m-ஆர்என்ஏ இணையாத டிஎன்ஏ இடங்களில் டிஎன்ஏ சுழல்கள் இருப்பதன் மூலம், உறுதி செய்தன. மரபணுக்களில் புரதத்தகவல் குறியிடா இடங்கள் இன்ட்ரான்கள் என்றும், அந்தக் குறயிடா மரபணுத் தொடர் "பிரிந்த மரபணுக்களை" உருவாக்கும் என்றும் பின்னறியப்பட்டது. உட்கருவில் முழு டிஎன்ஏ'வின் குறியீடு முதலில் தற்காலிக ஆர்என்ஏ'வில் (pre- m-ஆர்என்ஏ) நகலெடுக்கப்படும்; பின்னர் அது முதிர்ந்த m-ஆர்என்ஏ'வை விளைவிக்கும். ஆர்என்ஏ'க்களின் பிளப்பு செயல்முறை (RNA splicing) குறயிடா இண்ட்ரான் பகுதிகளை பிளந்து, அருகில் உள்ள குறியீடும் எக்சான் பகுதிககளைச் சேர்கின்றது.