சில வைரஸ்கள் மரபணு தகவல்களை ஆர்என்ஏ'வில் சேமிக்கும்.
டிஎன்ஏ மரபணு தகவல்களைக் குறிக்கும் ஒரே-கூறென நம்பப்பட்டது. மேலும், வாட்சன் மற்றும் கிரிக்'கின் மைய-கோட்பாட்டு, மரபணுத்தகவல்கள் டிஎன்ஏ'விலிருந்து ஆர்என்ஏ'விற்கு அதன் பின் புரதத்திற்கு "ஒரே வழயாக" பாயும் என்று கருதியது. ஆனால் 1971'லிலோ , சில வைரஸ்கள் ஆர்என்ஏ'விலிருந்து டிஎன்ஏ 'விற்கு மரபணு தகவல்களை எடுத்துச்செல்லும் என்ற கண்டுபிடிப்பு, ஆச்சர்யத்தை அளித்தது. அப்படி இருந்தும், இந்த வைரஸ்கள் இறுதியில் உயர்-உயிரினங்களைப் போன்றே புரதங்களை செய்தன. ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டத்தின் படி, நோய்த்தொற்றின் போது, ஆர்என்ஏ குறியீடு முதலில் டிஎன்ஏ' வாக பின் நகலாகி, பிறகு ஆர்என்ஏ புரதத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு மையத்தத்துவத்திற்கு மாறாக முதலில் ஆர்என்ஏ டிஎன்ஏ' வாகப் பின்னோக்கி மாற்றப்படுவதை, 'தலைகீழ் படியெடுத்தல்' (reverse transcription) என்று அழைக்கப்படுகிறது. இந்த நுட்பத்தை பயன்படுத்தும் வைரஸ்களை, 'ரெட்ரோவைரஸ்கள்' என வகைப்படுத்தினர். இரட்டை திரி- டிஎன்ஏ மூலக்கூறுகளை ஆர்என்ஏ'விலிருந்து உருவாக்க, தலைகீழ் படியெடுத்தல் புரதம் (reverse transcriptase) என்னும் ஒரு சிறப்பு பாலிமரேஸ் பயன்படுத்துகிறது.