ஆர்என்ஏ'களே முதலிலெழுந்த மரபணு மூலக்கூறுகளாகும்.

RNA was the first genetic molecule.

1960 ல் நடந்த சோதனைகள், m-ஆர்என்ஏ'வானது மரபணுத்தகவல்களை சேமிக்கவும், பரிமாற்றம் (t-RNA) மற்றும் ரைபோசோமுக்குரிய (r-RNA) ஆர்என்ஏ மரபணுத்தகவல்களைப் புரதங்களாக பெயர்க்கவும் ஆற்றலுடையது, எனக் காட்டியது. சில ஆர்என்ஏ' க்கள் தங்களின் மரபு குறியீட்டை சுயத்திருத்தம் செய்ய உதவும் என்று இரண்டு சகாப்தங்களுக்கு பின்னர் நடந்த சோதனைகள் காட்டியது. இது இரு கேள்விகளை எழுப்பியது: 1) ஏன் ஆர்என்ஏ'கள் மரபணு தகவலின் வெளிப்பாட்டில் பல வகையானப் பங்குகளை வகிக்கின்றன? 2) மரபணுத்தகவலை வெளிப்படுத்தை ஆர்என்ஏ'வாலேயே செய்ய முடியும் எனில், டிஎன்ஏ'வில் தகவல் சேமிப்பு நடக்கக் காரணமென்ன? ஆர்என்ஏ'கள் ஓர் மரபணு மூலக்கூறாக செயல்படும் முழுத்திறனைக் கொண்டுள்ளது; ஒருகாலத்தில் அதுவே தனது சொந்த மரபுவழி- செயல்முறைகளைச் செய்வித்தது. எனவே ஆர்என்ஏ'கள் பாரம்பரிய-வழியின் முதல் மூலக்கூறென்றும், டிஎன்ஏ' வரலாற்றில் முக்கியமாவதற்கு முன், மரபணுத்தகவல்களை சேமிக்கவும் மற்றும் வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளதாகவும் வழிவந்ததென எண்ணப்படுகிறது. எனினும், ஒற்றை-இழை ஆர்என்ஏ' எளிதாக என்சைம்களால் சேதப்படுத்தப்படும் நிலையற்ற கூறுகளாகும். அடிப்படையாக, ஆர்என்ஏ மூலக்கூற்றின் இரட்டிப்பாலும், ரைபோஸ் சக்கரைக்கு பதிலாக டியாக்சிரிபோஸ்சர்க்கரையை பயன்படுத்தியும், டிஎன்ஏ'வானது துல்லியத்துடன் மரபணு தகவல்களை அனுப்பும் மிக நிலையான கூறானது.