சில வகையான பிறழ்வுகள் தானாகவே சீர்திருத்தப்படும்.
1950 ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான உயிரியலாளர்கள் மரபணுக்களை நிலையானவையென எண்ணினார்கள். டிஎன்ஏ சேதமடைநது பின்னர் சீர்திருத்தப்படும் என்பதை, நுண்ணுயிர்களின் ஒழூங்கில்லா நடத்தையை வைத்து அறிந்தனர். புற ஊதாக்கதிர்கள் படும்போது அல்லது சில இரசாயனத்தினால் பிறழ்வடைந்த நுண்ணுயிர்கள் தானாகவே சீரடைந்தன. பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை, சுற்றுச்சூழல் அல்லது டிஎன்ஏ நகலாக்கும் செயலின் போது நடக்கும் பிறழ்வுகளை சீர்திருத்த, பல வகையான என்சைம்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்தகைய என்சைம்கள் இல்லாமல், டிஎன்ஏ பிறழ்வுகள் பொறுத்துக்கொள்ளப்படாத நிலையை அடையயியலும். குறைபாடுடைய பழுதான என்சைம்களினால் உயிர் வகிக்கும் திறன் குறைவதன் மூலம், இப்புரத்தன் முக்கிய நிலையை அறியலாம். ஆனாலும் இந்தச் சீர்திருத்தப் பிழையே பரிணாம வளர்ச்சியின் முன்னோடி என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.