டி.என்.ஏ. குரோமோசோம்களுக்குளிருக்கும்
1800 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், உயிரணுவியலின் மூலமாக, உயிரினங்களில் இருக்கும் ஒவ்வொரு செல்லின் உட்கருவிலும் குறிப்பிட்ட குரோமோசோம்களின் தொகுப்பு உண்டு என கண்டறியப்பட்டது. அதே காலகட்டத்தில் உயிர்வேதியியலின் ஆய்வுகள், குரோமோசோம்களை உருவாக்கும் அணுப் பொருட்கள் - டிஎன்ஏ மற்றும் புரதங்களைக் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டியது. 20 ஆம் நூற்றாண்டின் முதல்-நான்கு தசாப்தங்களில், பல விஞ்ஞானிகள் புரதங்களே மரபியல் குறியீடுகளைக் கொண்டுள்ளதாகவும், டிஎன்ஏ வெறும் ஆதரவாக இருக்கும் "சாரம்" ஆகவும் இருப்பதாக நம்பினர். அதன் எதிர்மறையே உண்மையெனப் பின்னர் நிருபிக்கப்பட்டது. 1940 மற்றும் 1950 களில் ஏவரி மற்றும் ஹெர்ஷே' வின் ஆராய்ச்சி, டிஎன்ஏ தான் மரபணுவின் மூலக்கூறு என்று நிரூபித்தது. ஒவ்வொரு குரோமோசோமும் ஒரு மிக நீண்ட, தொடர்ச்சியான இழையுடைய டிஎன்ஏ' வைக் கொண்டிருக்கும் என்று 1960 மற்றும் 1970 களின் ஆராய்ச்சிகள் நிருப்பித்தன. அந்த டிஎன்ஏ தொகுப்பபில் குரோமோசோமமில் உள்ளது என்றும் காட்டியது. உயர் உயிரினங்களில், ஹிஸ்டோன்ஸ் (Histones) போன்ற சில கட்டமைப்பு புரதங்கள் "சாரம்" போன்று அமைந்து டிஎன்ஏவை குரோமோசோமாகக் கட்டமைக்கும். டிஎன்ஏ இழை ஹிஸ்டோன் கருக்களையொட்டி சுற்றியுள்ளது. அந்த கருக்கள் குரோமோசோமின் குறிப்பிட்ட பகுதிகளில் சுருக்கிடப்பட்டுள்ளது.