மரபணுக்கள் கலப்பது இல்லை.
பொதுவாக, பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பண்புகளின் கலப்பாக இருப்பதுப் போல தோன்றும். எனினும், மெண்டல் தான் ஆய்வு செய்த பட்டாணி செடியின் பண்புக்கூறுகளுக்கு இந்த உண்மை பொருந்தாது என்று கண்டறிந்தார். தூய-இன பட்டாணி செடிகளை கொண்டுக் கலப்பினம் செய்தும் கூட கலப்பு குணங்களுடைய சந்ததியை உருவாக்க முடியவில்லை. உதாரணமாக, ஒரு தூய-இன பச்சை விதை மற்றும் தூய-இன மஞ்சள் விதை பட்டாணி செடிகளின் இடையே கலப்பினம் செய்யும்போது, இடைநிலை பச்சை-மஞ்சள் நிறமுடைய விதைகள் கொண்ட சந்ததியை உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். சாயம்(paint) ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே வண்ண கலவை நடைப்பெறும். எனினும், மெண்டல் இந்த கலப்பினம் விளைவாக ஒரே நிறம் (மஞ்சள்) கொண்ட சந்ததியை மட்டுமே உருவாக்கமுடியும் என்பதை கண்டறிந்தார். கலப்பினங்களை உருவாக்கமுடியாமல் போனது மட்டுமில்லாமல் பச்சை நிறமுமம் காணாமல் போனது.