உயர்ந்த செல்கள் ஒரு பண்டைய குரோமோசோம்களை ஒருங்கிணைக்கும்.
உட்கருவில் (Nucleus) காணப்படும் குரோமோசோம்களின் தொகுப்பு மட்டுமில்லாமல், கூடுதலாக குழியமுதலுருவின் (cytoplasm) எரிசக்தி உற்பத்திக்கும் உள்ளுறுப்பானான இழைமணியிலும்(mitochondria) வேறு விதமான குரோமோசோம் காணப்பட்டது. இழைமணிக்குரிய (Mitochondria) குரோமோசோமமில் ஆக்ஸிடேடிவ் பாஸ்போரைலேஷன் (Oxidative Phosphorylation) என்னும் ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்புக்குரிய செயலுக்கான மரபணுக்கள் உள்ளன. ஒருகாலத்தில் மைட்டோகான்ரியாகள் சுதந்திர-பாக்டீரியாவாக இருந்ததாகவும், முந்தய யூகார்யோட் (Eukaryot) செல்கள் பின்னர் அதை எடுத்து கொண்டன என்பதற்குச் சான்றுகள் உண்டு. செல்களானது ஆற்றல் நிறைந்த ஊட்டச்சத்தை வழங்குகின்றது மற்றும் மைட்டோகான்ரியான் ஆக்சிஜனைப் பயன்படுத்தி ஆற்றலை பிரித்தெடுக்கும். ஆக்சிஜன் பழமையான வளிமண்டலத்தில் குவிக்கப்பட்டதனால், இந்த இணைவாழ்வுத்திறமான (symbiotic) உறவுமுறை உயிர்வாழ முக்கிய காரணமாகியது. பொதுவாகவே மைட்டோகான்ரியாவின் (MT) அளவு பாக்டீரியாவைப் போன்றிருக்கும், அதன் MT மரபணு- பாக்டீரியாவைப் போன்ற அம்சங்களையும் வைத்திருக்கும். பாக்டீரியாவின் குரோமோசோம்களை போல MT மரபணுவும் ஒரு வட்ட மூலக்கூறு ஆகும். மேலும், மிக சில இண்ட்ரோன்களே (Introns) MT மரபணுக்களில் காணப்படுகின்றன. கூடுதலாக, தாவரங்கள் குளோரோபிளாஸ்டுகளில் (chloroplast) பண்டைய குரோமோசோமைக் கொண்டிருக்கின்றன. அவையும் இணைவாழ்வு முறையாக (symbionts) ஏற்றுக்கொள்ளப்பட்டது.