சில டிஎன்ஏ'கள் புரதத்தைச் குறியிடாது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உயிரணுக்களிலிருந்து டிஎன்ஏ எடுக்கப்பட்ட போது புரதங்கள் (ஹிஸ்டோன்கள் உட்பட) கரைந்துவிடும். இதன் விளைவாக, நீண்ட இழை-வெற்று டிஎன்ஏ'வில் மரபணுத் தகவல்கள் மீட்டெடுக்கப்படும். அதனால் குரோமோசோமை ஒரு முழு தொடர் இழை- டிஎன்ஏ'வாக பார்ப்பதேப் பயனுள்ளதாக இருக்கும். மரபணுக்கள், டிஎன்ஏ'வின் இழையை ஒட்டி அணிவரிசையாக அமைந்திருக்கும், அதன் குறிப்பிட்ட தொடர்ச்சிகள் குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கும் மரபணுக் குறியீட்டை கொண்டிருக்கும். பாக்டீரியாவின் மரபணுக்கள் இறுக்கமாக சேர்ந்திருக்கும்; அனேகமாக அனைத்து டிஎன்ஏ'களும் புரதங்களை குறியிடும். எனினும், 1960 இல் செய்த சோதனைகளின் மூலம், பெரும்பாலான யூகார்யோடிக் டிஎன்ஏ'கள் திரும்ப திரும்ப அமைந்திருக்கும் தொடர்ச்சியை கொண்டிருந்தாலும், புரதங்களை குறியிடவில்லை. நீண்ட குறியிடாதத் தொடர்கள் - அல்லது intergenic பகுதிகளில் - ஒப்பிடுகையில் அரிதாக நிகழும் மரபணு "தீவு" களைத் தனிமைப் படுத்தும். 1970 ஆம் ஆண்டு நடந்த ஆராய்ச்சிகளில் பல புரத-குறியிடாத தொடர்ச்சிகளான இண்ட்ரோன்கள் (Introns) மரபணுக்களில் காணப்பட்டது என்றும், அவை புரத-குறியீடு பகுதிகளான எக்சோன்களிலும் (Exons) அமைந்திருக்கும் எனவும் கண்டறியப்பட்டது. மனித டிஎன்ஏ'வில் வெரும் ஐந்து சதவீதம் மட்டுமே புரத குறியாக்கம் செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.