சில டிஎன்ஏ'கள் தாவும்.
இருபதாம் நூற்றாண்டின் முதற்ப்பகுதியில், தாமஸ் ஹண்ட் மோர்கனின் கருத்தான குரோமோசோமின் நீளத்தின் வழியே மரபணுக்கள் மணி போன்று அமைந்திருக்குமென்பது சிறிது மாறியது. மரபணுக்கள் குரோமோசோமில் நிரந்தர நிலையில் அமைந்திருக்கும் புனிதமான பொருளாகக் காணப்பட்டது. எனினும், 1950 களில், பார்பரா மெக்கிளிண்டாக் என்பவர் குரோமோசோமின் குறிப்பிட்ட சில டிஎன்ஏ துண்டுகளின் (transposons) செயலாக்கத்தினால் அத்துண்டுகள் இடமாறும் (தாவும்-transpose/jump) என குறிப்பிட்டார். அவர் சுற்றுச்சூழல் விளைவுகளுக்கேற்ப மரபணுக்கள் வேகமாக மீண்டும் ஒன்றிணைய, இடமாற்றம் (transposons) உதவுமென கருதினார். மெக்கிளிண்டாக்கின் ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது, ஏனெனில், நடைமுறையில் இருக்கும் தத்துவத்தின் விளக்குவது மட்டுமல்லாமல், குரோமோசோம் மற்றும் மரபணு கலப்பினங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவரது கருத்துக்களை உறுதிசெய்ய நவீன கால டிஎன்ஏ பகுப்பாய்வுக் கருவிகளின் கண்டுபிடிப்பு வரை காத்துக்கொண்டு இருக்க வேண்டியதாயிற்று. இந்த ஆராய்ச்சியே குரோமோசோம்களை இயங்க, மற்றும் மாற்றிக்கொள்ளக் கூடியக் கட்டமைப்பு என்னும் நவீனக் கருத்துக்கு வழி வகுத்தது.