மரபணுக்கள் இனங்களுக்கிடையே நகர்த்தமுடியும்.
மரபணு குறியீட்டின் பொதுமையுடைமையினால், ஒரு உயிரினத்தின் பாலிமெரேஸ்களைக் (Polymerase) கொண்டு மற்றொரு உயிரினத்தின் மரபணுவை எடுத்தமைக்கயியலும் (Transcribe). இதற்கு எடுத்துக்காட்டாக, பல்வேறு பாக்டீரியாயினங்கள், தடுப்புச் சக்தியை (Antibiotic) பிளாஸ்மிடுகள் (Plasmid) என்னும் சிறிய குரோமோசோம்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் பெறுகின்றது. 1970 ன் முற்பகுதியில், கலிபோர்னியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், இவ்வாறான மரபணு பரிமாற்றத்தை வைத்து, இரண்டு வெவ்வேறு இனங்களுக்கு இடையே ஒரு "இனக்கலப்பு" (Recombinant) டிஎன்ஏ மூலக்கூற்றை பரிமாற்றம் செய்தனர். 1980 களின் முற்பகுதியில், மற்ற விஞ்ஞானிகள் இந்த இனக்கலப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, E.coliக்குள் மனித மரபணுவைச் செலுத்தி மனிதனின் இன்சுலினையும் வளர்ச்சி ஹார்மோனையும் உருவாக்கினர். மறுஇணைவு டிஎன்ஏ தொழில்நுட்பம் - மரபணு பொறியியல் - மரபணுக்கள் எவ்வாறு செயல்படுமென்ற ஆழத்தை தெரிந்துக் கொள்ளவுதவும். விலங்கு மாதிரிகளில் பயன்படுத்தி மரபணு செயல்பாட்டை சோதனை செய்ய சாத்தியமில்லாத சந்தர்பங்களில், பாக்டீரியா அல்லது செல் வளர்ப்பு மாதிரிகளில் மரபணுக்களை முதன் முதலில் வெளிப்படுத்தினர். இதேபோல், மரபணு பிறழ்வுகளின் தோற்ற அமைப்பு மற்றும் மருந்துகளின் திறமையையும் இனக்கலப்பை வைத்து சோதிக்கமுடியும்.