டிஎன்ஏ செல்கள் வெளியிலிருந்து வரும் சிக்னல்களுக்கு செயல்படும்.
செல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்வதும், மேலும் உடலின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் குறிப்புகளை எதிர்கொள்வதுமே, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவையானவையாகும். குறிப்பாக சில செல்வகைகளின் வளர்ச்சியைத் தூண்ட, பல்வேறு சுரப்பிகளிலிருந்து வெளிவரும் ஹார்மோன்கள் (Hormones) உடல் முழுவதும் பயணிக்கின்றன. செல்கள் அதன் சவ்வில் (Cell membrane) தொகுத்துள்ள ஏற்பிக்கேற்ப (receptor) ஹார்மோன்களால் தூண்டப்படும் திறனைப் பெற்றுள்ளன. ஏற்பி-ஹார்மோன் பிணைப்பால் தொடங்கப்படும் தொடர்ச்சியான மூலக்கூறின் மாற்றங்களையே, சிக்னல் குறுக்கு கடத்துகை (Signal Transduction) என்று அழைக்கப்படுகிறது. அதுவே செல்களில் வளர்ச்சிக் சிக்னலைக் கடத்தவுதவும். முதலில், ஏற்பியானது சிக்னலை செல் சவ்விலிருந்து உள் சவ்வின் மேற்பரப்பிற்கு கடத்தி, அங்கிருக்கும் புரதத் "தூதுவர்களை" (protein messengers) இயக்குகிறது. இத்தகைய தூதுவர்களே இரசாயன எதிர்வினைகளின் அடுக்கையை தொடங்கி வைக்கும் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் பாஸ்பேட் குழுக்களின் சேர்க்கையைக் கொண்டிருக்கும். இதுவே சைடோபிளாஸத்திற்கும் (cytoplasm), பிறகு உட்கருவுக்குள் (nucleus) செல்லும் சிக்னலாகும். சிக்னல் குறுக்கு கடத்துகைக்கான இறுதி கட்டத்தில், டிஎன்ஏ'வை இணைக்கும் புரதங்கள் ஒழுங்குமுறை வரிசையுடன் இணைந்து, டிஎன்ஏ போலிகள் (replication) அல்லது மறுவடிவத்தைத் (transcription) தொடங்கிவைக்கும்.