பல்வேறு செல் வகைகளில் வெவ்வேறு மரபணுக்கள் செயல்பட்டிருக்கும்.
பெரும்பாலான உயிரினங்கள் பல்வேறு செயல்பாடுகளுக்காக, பல்வேறு வகையான சிறப்பு செல்களைக் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கல்லீரல் செல், ஒரு நரம்பு செல்லின் உயிர்வேதியியல் கடமைகளைக் கொண்டிருக்காது. இருந்தாலும் ஒவ்வொரு செல்லும் ஒரே மரபணுத் தகவல் தொகுப்பைக் கொண்டிருக்கும். அப்படியானால் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் உயிர்வேதியியல் செயல்பாடுகளை - எப்படி பல்வேறு வகையான செல்கள் கொண்டிருக்க முடியும்? பெரும்பாலும் உயிர்வேதியியல் செயல்பாட்டை நிர்ணயிக்க குறிப்பிட்ட நொதிகள் – புரதங்கள்(enzymes) தேவைப்படுவதனால், பல செல் வகைகளில் பல்வேறு மரபணுக்களின் தொகுப்புகளை இயக்க மற்றும் செயலிழக்கவும் செய்யவேண்டும்.இவ்வாறே செல்கள் வேறுபடுத்தப்படுகின்றன. இவ்வாறான செல்லுக்கு ஏற்ப குறிப்பிட்ட மரபணுக்களை வெளிப்படுத்தும் அடையாளத்தை, செல்லில் தனிப்பட்ட mRNA'வை அடையாளப்படுத்தும் கலப்பு பரிசோதனைகள் உறுதி செய்தன. சமீபத்தில், டிஎன்ஏ வரிசைகள் (DNA arrays) மற்றும் மரபணு சிப்கள் (gene chips) வேகமாக ஒரு உயிரினத்தின் அனைத்து மரபணு செயல்பாட்டை சோதனையிடுவதற்க்கான வாய்ப்பை வழங்குகின்றது. வெளிப்புற காரணிகளின் விளைவாக வரும் மரபணுக்களின் இணை வெளிப்பாட்டை, இதன் மூலம் கண்டுபிடிக்கவும் மற்றும் சோதிக்கவும் முடியும்.