மேம்பாடு, செல்களின் வளர்ச்சி மற்றும் மரணத்தைச் சமப்படுத்தும்.
உயிரியலில், இழையுருப்பிரிவு (Mitosis) செயல்முறையினால் ஏற்படும் உயிரணு- இனப்பெருக்கத்தின் மூலம் செல்களின் வளர்ச்சியானது நிகழ்கின்றது. திசு (Tissue) அல்லது உறுப்புக்குள் (Organ) ஒரு சரியான அளவு அடைந்தப்பின், இழையுருப்பிரிவானதுக் குறைந்து, பின் ஓய்வுக்கட்டத்தையடையும். 1980 மற்றும் 1990ல், ஈஸ்டிலும் பின்னர் யூகார்யோட்டிலும் (Eukaryots), செல்லின் வளர்ச்சி - ஓய்வு சுழற்சியை "சோதனைச்சாவடி வழி" (checkpoint) மூலக்கூறுகளேக் கட்டுப்படுத்துகின்றது என்பதைக் கண்டறிந்தனர், குறிப்பிடத்தக்க வகையில், சாதாரண வளர்ச்சிக்கு "அப்போப்டொசிஸை." (Apoptosis) என்றழைக்கப்படும் செயல்முறையின் மூலம் சில ஆரோக்கியமான செல்கள் அழிக்கப்படுவது அவசியமானது. அப்போப்டொசிஸ் இயல்பு பற்றின ஆரம்ப தடயங்களை கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ் (roundworm) 'லிருந்து வந்தது. அவ்வுயிரனத்தின் 959 செல்களின் வளர்ச்சியானது அதன் கருவுற்ற முட்டை இருந்து அடிச்சுவட்டைப் பின்பற்றும். காணப்படும் வளர்ச்சி விரிவாக ஆராயப்ப்ட்டது. செல்களின் "விதி" பற்றிய ஆய்வில், கரு வளர்ச்சியின் போது குறிப்பிட்ட செல்கள் எந்தக் குறிப்பிட்ட நேரத்தில் இறக்க வேண்டுமென்பதைத் திட்டமிட்டுள்ளது என்று காட்டியது. திட்டத்தில் தடைகள் ஏற்ப்ட்டால், செல்கள் பெருமளவு உருவாகி புற்றுநோயிக்கு வழிவகுக்கும்.