சில மரபணுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஒரு தூய பொருளை உருவாக்கும் அணுக்களை போலத் தான் மரபணுக்களும் செயல்படும் என மெண்டல் நம்பினார். மரபணுக்கள் பல்வேறு வழிகளில் சேரும், ஆனால் எப்போதும் தமது தனித்துவமான அடையாளத்தை தக்க வைத்து கொள்ளும். எடுத்துக்காட்டாக, விதையின் வண்ணம் போன்ற பல்வேறு பண்புகளைக் கொண்ட இரண்டு தூய-இன செடிகளுக்கு இடையே சேர்க்கை நடைப்பெறும் போது அதன் கலப்பின சந்ததியிடம் பச்சை மற்றும் மஞ்சள் விதை வண்ண மரபணுக்களும் இருக்கும். பிறகு ஏன் அந்த சந்ததியிடம் மஞ்சள் விதைகள் மட்டுமே இருக்கிறது? இரண்டு மரபணுகளும் இருந்தாலும், நிறத்தில் எந்த கலப்பும் நடைபெறாது. ஏனெனில், மஞ்சள் நிற விதையின் மரபணு, பச்சை நிற மரபணுவின் மீது "ஆதிக்கம்" செலுத்துகிறது என மெண்டல் கூறினார். மரபணுவின் ஒரே ஒரு நகலை உபயோகிக்கும் போது, ஆதிக்கம் செலுத்தும் மரபணுவின் பாரம்பரியமே வெளிப்படும். அவர் கலப்பின செடிகளை சேர்க்கைக்கு உபயோகித்த போது, அடுத்த தலைமுறையில் மீண்டும் பச்சை விதைகள் தோன்றியன. அரியவகை பச்சை தனித்தன்மை கொண்ட மரபணு நகல் இருந்தால் மட்டுமே "அரியவகை" பச்சை பண்புகள் காணப்படும் என மெண்டல் காரணம் தெரிவித்தார்.