மரபணுக்கள் உண்மையானவை.
1865ல் மெண்டல், "தாவர கலப்பின சோதனை" என்னும் ஆராய்ச்சியை வெளியிட்டார், மற்றும் பல நாடுகளில் உள்ள முக்கிய விஞ்ஞானிகளுக்கு மறுபதிப்புகளும் அனுப்பி வைத்தார். எனினும், மரபணுக்கள் பற்றிய அவரது சுருக்க கருத்தை ஏற்றுக்கொள்ள அவரது காலத்து இயற்க்கை விஞ்ஞானிகள் தயாராக இல்லை, ஏனெனில் அவர்கள் உயிரினங்களை வகைப்படுத்துவதில் முதன்மையாக பயிற்சி பெற்றவர்கள். 1900 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் சுதந்திரமாக மெண்டலின் முடிவுகளை உறுதி செய்தனர். அதன் வரை, மெண்டலின் முடிவுகள் யாராலும் பாராட்ட படவில்லை. அந்த காலத்தில், செல்கள் தான் வாழ்க்கையின் அடிப்படை அலகுகள் என வலுவாக நம்பப்பட்டது. நூல் போன்ற குரோமோசோம்கள் உட்பட - உயிரியல் செல்களில் இருக்கும் கட்டமைப்புகளைக் கண்டறிய சாயங்கள் உருவாக்கப்பட்டன. பல்வேறு உயிரினங்கள், பல்வேறு எண்ணிக்கையுடைய குரோமோசோம்களைச் சுமந்திருக்கும். அவ்வெவ்வேறு எண்ணிக்கை அவ்வுயிரங்களின் வாழ்க்கை வடிவத் தகவல்களை குறிக்க உதவும் என நம்பப்பட்டது. இந்த படிப்புகள், மெண்டலின் மரபணு ஆராய்ச்சியின் முடிவுகளை திடப்படுத்த உதவியாக இருந்தது.