மரபணுக்கள் ஜோடிகளாக வரும்.
முழு பட்டாணிச் செடியை ஆராய்வதற்கு பதிலாக, மெண்டல் அவர்கள், உடனடியாக வேறுபடுத்தக்கூடிய ஏழு தனிப்பட்ட இயல்புகளை மட்டும் கவனம் செலுத்தினார். அவர், ஒவ்வொரு தனிப்பட்ட பண்புகளிலும் இரண்டு மாற்று வடிவங்கள் உள்ளது என கண்டறிந்தார். எடுத்துக்காட்டாக, விதை நிறம் பச்சை அல்லது மஞ்சளாக இருக்க முடியும். பல்வேறு சேர்க்கையின் முடிவில், ஒரு தனிப்பட்ட ஒவ்வொரு மாற்று வடிவப் பண்புகளும் ஒரு மரபணுவே தீர்மானிக்கின்றது என்று முடித்தார். குழந்தைக்கு தாயிடமிருந்து வரக்கூடிய மரபணுக்களின் பாரம்பரிய இயல்புகளை பின்பற்ற, மெண்டல் முதலில் ஒவ்வொரு பெற்றோர்களின் மரபணுக்களை உறுதியாக தெரிந்திருக்க வேண்டும். பட்டாணித் தாவரம், இயற்கையாகவே தன் மகரந்தச் சேர்க்கையாக இருப்பதால், "தூய-இன" வகைகள் எளிதாக கிடைக்கும். ஒவ்வொரு வகையும் ஒரு தனிப்பட்ட இயல்புகளைத் தீர்மானிக்கக்கூடிய மரபணுக்களை மட்டுமே கொண்டிருக்கும். மஞ்சள் விதைகள் கொண்ட தூய-இன தாவரங்கள் மஞ்சள் விதைகள் கொண்ட சந்ததியை மட்டுமே கொடுக்கும். பச்சை விதைகள் கொண்ட தூய-இன தாவரங்கள் பச்சை விதைகள் கொண்ட சந்ததியை மட்டுமே கொடுக்கும்.மேலும் சோதனைகளின் முடிவுகளிலிருந்து, மெண்டல் தூய-கலப்பின தாவரங்களில் ஒவ்வொரு தனிப்பட்ட இயல்புகளுக்கும் ஒரே மரபணுவின் இரு நகல்களை கொண்டிருக்க வேண்டும் என்று காரணம் கண்டறிந்தார்.