பிறழ்வுகளானவை, மரபணு தகவல்களின் மாற்றங்களாகும்.
ஒரே இனத்தின் இரு நபர்களின் டிஎன்ஏ வரிசைகள், 1000த்தில் ஒரு நியூக்ளியோடைட்டின் வேறுபாடென்ற விகிதத்தில், ஒரே மாதிரி அமைந்திருக்கும். பிறழ்வினால் ஏற்படும் டிஎன்ஏ வேறுபாடு, ஒரு சிறிய நியூக்ளியோடைட்டின் மாற்றங்களோ, அல்லது பெரும் நியூக்ளியோடைட்டின் உட்செருகல்கள் மற்றும் அழித்தலினாளோ நிகழும். சில பிறழ்வுகள் பரிணாமத்தை தொடக்கவும், சில நோய்களை உண்டாக்கவும் செய்யும். மனிதர்களில், பெரும்பாலான டிஎன்ஏ பிறழ்வுகள், புரதங்களை குறியிடா பகுதிகளில் ஏற்படுகின்றன. இத்தகையது வளர்ச்சி மற்றும் பரிணாமத்தை பாதிக்காது. 1920' ல், டிஎன்ஏ பிறழ்வுகள் முதலில் X-கதிர்கள் மூலம் ட்ராசோபிலா'வில் தூண்டப்பட்டது. மற்ற அயனியாக்க கதிர்வீச்சும் (ionizing radiation) இப்பிறழ்வுகளுக்கு வழிவகுக்கும். சூரிய ஒளியின் ஒரு வகையான, புற ஊதாக்கதிர்வீச்சு, அருகிலுள்ள தைமின் நியூக்ளியோடைட்களின் இணைப்பு சேதப்படுத்தி பிறழ்வினை ஏற்படுத்தும். மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கையிலுள்ள பல்வேறு இரசாயனங்கள் மரபணு பிறழ்வுக் காரணிகளாகக் காணப்படுகிறது. மேலும், டிஎன்ஏ பிரதிபலிப்பே பிறழ்வுகளின் காரணியாகவும் அமையும்.