குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை ஒத்திருக்கின்றன.

Children resemble their parents.

மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, மனிதனின் பாரம்பரிய இயல்புகள் எப்படி அடுத்தடுத்தத் தலைமுறைக்கு கடத்தப்படுவதைக் கண்டு மக்களே ஆச்சரியப்பட்டனர். குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர்களில் யாராவது ஒருவரை போல தோற்றமளித்தாலும், பெரும்பாண்மையான பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பண்புகளின் கலப்பாகவே தெரிகின்றது. நூற்றாண்டு காலமாக நம் உள்நாட்டு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வளர்ப்புப் பண்புகள் உதாரணமாக குதிரைகளின் வேகம், கழுதைகளின் வலிமை, மற்றும் பயிர்களில் உள்ள பெரிய பழங்கள் இவையெல்லாம் கட்டுப்பாட்டான இனச்சேர்க்கையின் மூலமே உயிரூட்ட முடியும். எனினும், குறிப்பாக இரண்டு பெற்றோர்களுக்கு இடையேயான சேர்க்கையின் விளைவை முன்கூட்டியேக் கணிக்க விஞ்ஞான ரீதியான வழி ஏதுமில்லை. 1865க்கு பிறகு தான் கிரிகர் ஜோஹன் மெண்டல் என்ற ஒரு அகஸ்தினியன் துறவியார் பெற்றோரிடமிருந்து பெறப்படுகின்ற தனிப்பட்ட பண்புகள் எல்லாவற்றயும் தீர்மானிப்பது தனி "காரணிகள்" (பின்னர் மரபணுக்கள் என்று அழைக்கப்பட்டது) என கண்டறிந்தார். அவரது கடுமையான அணுகுமுறை, விவசாய இனப்பெருக்கம் எனும் கலையை அறிவியலாக மாற்றியது. அவருடைய ஆராய்ச்சி, மரபு சார்ந்த பின்னணிக் கொண்டப் பெற்றோருடன் தொடங்கியது - விளைவாக பிள்ளைகளின் மரபு முறைகளை ஒப்பிடுவதற்க்கான அடிப்படை கிடைத்தது. பின்னர், பிள்ளைகளின் அடுத்தடுத்த தலைமுறைகளின் பல்வேறு பண்புகளை காட்டும் தனிநபர்களின் எண்ணிக்கையை அவர் கவனமாக கணக்கிட்டார்.