டிஎன்ஏ நியூக்ளியோடைட்களின் வரிசையே மரபணுவாகும்.
மரபணு, பாரம்பரியத்தின் ஒரு தனி அலகாக, புலப்படும் பண்பின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது என மெண்டல் விவரித்தார். பீடில் மற்றும் டாட்டம் (Beadle and Tatum) வளர்சிதைமாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புரதம் செய்வதற்கான திசையினை வழங்கும் கூறு என விவரித்தனர். வரிசைபடத்துவதற்கான ஆராய்ச்சிகள், புரதங்கள் குறிப்பிட்ட வரிசையிலமைந்த அமினோ அமிலங்களின் நீண்ட சங்கிலி, என காண்பித்தது. "ஆரம்பம்" மற்றும் "நிறுத்து" குறியீட்டினைக் கொண்ட 'மும்மை சொற்களே' (triplet) மரபணுத்தகவல் என்று பின்னர் வந்த ஆராய்ச்சிகள் நிரூபித்தது. மரபணு ஆய்வுகள், ஒரு குறிப்பிட்ட மரபணுவை அமைக்கும் நியூக்ளியோட்டைடுகளின் சரியான வரிசையைத் தீர்மானிக்கும் முறைகளை கண்டது. டி.என்.ஏ. பாலிமெரேஸ்களும், செல்லில்லாஅமைப்புகளுமே, டிஎன்ஏ வரிசைமுறையயைப் பற்றியறிய காரணமாயின. இப்பொழுதோ, "குறைபாடுள்ள" நியூக்ளியோடைட்டைப் பயன்படுத்திச் டிஎன்ஏ சங்கிலி உருவாக்கத்தை நீக்கும-முறை, டிஎன்ஏ வரிசைமுறை அறியும் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.