டிஎன்ஏ'யின் வார்த்தைகள் மூன்று எழுத்துகளால் ஆனவையாகும்.
டிஎன்ஏ தகவல்கள், அதன் 'எழுத்துகளை' (A, T, C மற்றும் G) பயன்படுத்தி - 20 அறியப்பட்ட அமினோ அமிலங்களைக் குறிப்பிடும் 'வார்த்தைகளை' உருவாக்கும் 'மொழி'யாக இருக்க வேண்டும். 2 எழுத்துக்கள் வெறும் 16 சொற்களையே அமைக்கும், ஆனால் 3 எழுத்துகள் 64 சொற்களை அமைக்கும் என்று எளியக்கணிதம் காட்டியது. இம்மாதிரியான எளியக் கொள்கை சரியானதாக இருக்கும் என்னும் பட்சத்தில், ஆராய்ச்சியாளர்கள் கோடான் (codon) என்னும் 3 எழுத்துகளாலான குறியீட்டை அனுமானித்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாபல்கலைக்கழகம் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், செயற்கையாக வெவ்வேறு ஆர்என்ஏ மூலக்கூறுகளைத் தயாரித்தனர். அந்த ஒவ்வொறு ஆர்என்ஏ'வும் திரும்ப திரும்ப வரும் கோடான்களாலான ஒரு நீண்ட இழையினால் ஆனது. பின்னர், செயற்கையான ஆர்என்ஏ'கள் செல்லில்லா ரைபோசோம்கள், பரிமாற்றம் செய்யும் ஆர்என்ஏக்கள், அமினோ அமிலங்களுள்ள சூழலில் சேர்க்கப்பட்டது. கணிக்கப்பட்டது போல், செயற்கையான ஆர்என்ஏ ஒவ்வொன்றும், ஒவ்வொரு அமினோ அமிலங்கள் திரும்ப திரும்ப வரும் குழுவைக் கொண்ட பாலிப்பெப்டைட் சங்கிலியைத் தயாரித்தது. 64 சொற்களில் பல "நிறுத்து" அறிகுறியையும், மற்றும் பல அமினோ அமிலங்களை குறித்தவையுமாக இருந்தது.