உட்கருவின் முக்கிய மூலக்கூறுகள் டிஎன்ஏ மற்றும் புரதங்களாகும்.

DNA and proteins are key molecules of the cell nucleus.

மெண்டல் மற்றும் டார்வின் தமது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்ட நேரத்தில், டிஎன்ஏ'வானது உட்கருவிலிருக்கும் ஓர் முக்கிய ரசாயனமெனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், 1900களில், தலைமுறை தலைமுறையாக பரம்பரை-வழி மரபணுத் தகவல்களை அனுப்ப, புரதங்கள் நல்ல மூலக்கூறுகளாகக் கருதப்பட்டன. டிஎன்ஏ ஒரு மிகப் பெரிய மூலக்கூறென அறியப்பட்டிருந்தாலும், ஒரு செயற்கை பாலிமரைப் போன்று- நான்கு ரசாயன கூறுகளை ஒரே வரிசையில் அமைத்திருப்பதைப்போல் தோற்றமளிக்கும். மேலும், டிஎன்ஏ'விற்கென குறிப்பிட்ட செல்-செயல்பாடு இன்னும் கண்டறியப்படவில்லை. மறுபுறம், புரதங்களே என்சைம்களாகவும் (enzymes) மற்றும் செல்களின் கட்டமைப்புக்கூறுகளாகவும் இருந்தன. பல அமினோ அமிலங்களின் பாலிமர்களாக புரதங்களிருக்கும் என அறியப்பட்டவையே. இந்த பாலிமர்கள் பல்பெப்டைட்டுகள் (Polypeptides) என்று அழைக்கப்படுகின்றன. மிக முக்கியமாக, புரதங்களிலிருக்கும் 20 அமினோ அமிலம் (amino acids) "எழுத்துக்கள்" டிஎன்ஏ' வின் நான்கு "எழுத்துக்கள்" விட, தனிப்பட்ட தகவலை சாத்தியமாகக் கொண்டு செல்லும்.