மரபணுக்களைச் செயல்படுத்தவும், செயலிழக்கவும் செய்ய முடியும்.

Genes can be turned on and off.

மரபணுக்களின் குறியீடு மற்றும் கட்டமைப்பைப் பற்றி 1950 மற்றும் 60 களில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தப்பின், அவர்கள் ஒவ்வொரு புரதங்களுக்கும் ஒரு திட்டம் என்ற விகிதத்தில், மரபணுக்களானது திட்டங்களின் தொகுப்பு என எண்ணத் தொடங்கினர். ஆனால் மரபணுக்கள், எல்லா நேரமும் தமது புரதங்களை உருவாக்காதென்பதால், உயிரினங்களே மரபணு வெளிப்பாட்டை ஒழுங்குப்படுத்த முடியும் என்ற கருத்து தெரியவந்தது. பிரஞ்சு ஆராய்ச்சியாளர்கள் முதன் முதலில் பாக்டீரியாவை பயன்படுத்தி மரபணுக் கட்டுப்பாடு அறியத் தொடங்கினர். லேக்டோஸ் (Lactose) இருக்கும் பொழுது, E.coliயானது சர்க்கரையை வளர்சிதைக்க தனது முழு மரபணுத் தொகுப்பையும் இயக்கும். லேக்டோஸ் ஊக்குவிக்கும் நிகழ்வையும் மற்றும் டிஎன்ஏ'வில் இருக்கும் வினைத்தடுப்பானை நீக்கும் நிகழ்வையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். வினைத்தடுப்பானின் நீக்கம் மரபணு உற்பத்தியை இயக்குவித்தது. வினைத்தடுப்பானை உருவாக்கும் மரபணுவே ஒழுங்குபடுத்தும் மரபணுவாகும். அதன் கண்டுபிடிப்பானது உயர் உயிரினங்களின் வளர்ச்சியைப் பற்றிய சிந்தனையை மாற்றியது. செல்கள் கட்டமைப்பு புரதங்களுக்குத் தேவையான மரபியல் திட்டங்கள் மட்டுமல்லாமல் அதனை ஒழுங்குப்படுத்தும் திட்டங்களை கொண்டிருக்கும்.