உயிரினங்கள் பொதுவான மரபணுக்களைப் பகிர்ந்து கொள்ளும்.
அனைத்து வாழும் உயிரினங்களும், டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ மூலக்கூறுகளைப் பயன்படுத்தி மரபணு தகவல்களைக் குறிக்கின்றன. எனவே இந்த மூலக்கூறுகளாலான மரபணுக்குறியீடே, அனைத்து உயிர்களின் பகிர்ந்த வம்சாவளிக்கான ஆதாரமாகும். பரிணாம வளர்ச்சியில் காணப்படும் பல்வேறு உடல் அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்து வகைகளை ஆதரிக்க, புதிய வகையான மரபணுக்கள் தேவைப்படுகின்றன. அப்படி இருந்தாலும், வளர்ந்த உயிரினங்களின் அடிப்படை வளர்சிதை மாற்ற (metabolic) செயல்பாடுகளைக் குறித்தப் பல மரபணுக்கள் பழமையானதேயாகும். மரபணுக்கள் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி முழுவதிலும் பராமரிக்கப்படுகிறது. எனினும் இந்த மரபணுக்கள், பிற உயிரினங்களிடமிருந்து நடக்கும் பரிமாற்றத்தினாலோ, அல்லது திருடப்படுவதனாலோ கூடப் பராமரிக்கப்படும். பாக்டீரியா தனது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மரபணுக்களைக் கொண்ட பிளாஸ்மிடுகளைப், புணர்வு வழியாக பரிமாறி கொள்ளும், மற்றும் வைரஸ்கள் அவற்றின் மரபணுக்களைக் அது குடியேறும் செல்களுக்குள்ளேப் புகுத்தும். சில பாலூட்டியின் மரபணுக்கள், வைரஸ்களால் ஏற்கப்பட்டு பின்னர் மற்ற பாலூட்டி புரவலன்களுக்குக் கடத்தப்படுகின்றன. ஒரு உயிரினம் எந்த வழியில் தன் மரபணுக்களைப் பெற்றிருந்தாலும், அதன் புரதங்களின் சரியானச் செயல்பாட்டிற்குத் தேவையான அவசிய மரபணுப் பகுதிகளை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கும். சில பிறழ்வுகள் அத்தியாவசியமில்லாதப் பகுதிகளில் நடைப்பெறும்; இப்பிறழ்வுகளே ஒரு மரபணு-பரிணாம வாழ்வின் ஒட்டுமொத்த வரலாறாகும்.