முதன்மை மரபணுக்கள் அடிப்படை உடல் திட்டங்களைக் கட்டுப்படுத்தும்.
ஒரு உயிரினத்தின் வளர்ச்சியின் போது - ஒரு கருவுற்ற முட்டையிலிருந்து, கரு மற்றும் இளம் நிலைகளின் வழியாக, முதிர்ந்த நிலைவரை - சரியான நேரத்தில் சரியான இடங்களில் ஒருங்கிணைந்த மரபணுக்களின் தொகுப்பின் வெளிப்பாடுகள் தேவைப்படுகின்றன. ட்ராசோபிலாவில் (Fruitfly) நிகழும் பல வினோதமான பிறழ்வு-ஆய்வுகள், மூலக்கூறு அடிப்படையிலானப் பெரிய வளர்ச்சி திட்டங்களைப் புரிந்து கொள்ளவுதவின. ஆரம்பகாலக் கரு மரபணுக்கள், நோக்குநிலையையமைக்கும் புரதங்களை வெளிப்படுத்தியும், ஈ கரு உடல் பாகங்களை வரையறுத்துமுள்ளன. பின்னர் "ஹோமியோடிக்" (Homeotic) மரபணுக்கள் ஒவ்வொரு பகுதியிலும் செயல்பட்டு உடல் பாகங்களை தனிமைப்படுத்துகின்றன. வரிசை பகுப்பாய்வு மூலம் ட்ராசோபிலா மற்றும் முதுகெலும்புள்ள விலங்குகளின் ஹோமியோடிக் மரபணுக்கள், homeobox எனப்படும் 180-நியூக்ளியோடைட் பகுதியை பகிர்ந்துக் கொள்ளும். இந்த homeobox புரதங்களின் கட்டமைப்பானவை, டிஎன்ஏ ஊக்குவிப்பு (promotors and enhancers) பகுதிகளுடனிணையும் ஒழுங்குமுறை புரதங்களின் பகுதிகளைப் போலிருக்கும். புரதமானவை உடல் பகுதியின் வளர்ச்சிக்குக் காரணியான -பல மரபணுக்கள் பகிரும் குறிப்பிட்ட ஊக்குவிப்பு பகுதியுடனிணையும் போது, ஹோமியோடிக் புரதம் ஒருங்கிணைந்த வெளிப்பாட்டை காண்பிக்கும்.