மனித மரபுத்தொகுதியைப் புரிந்துக்கொள்ள டிஎன்ஏ ஓர் ஆரம்பம் மட்டுமே!

DNA is only the beginning for understanding the human genome.

டிஎன்ஏ'வானது நேரம் ஊடாக மரபணு தகவலைப் பரிமாற்றும் போதிலும், அடிப்படையாக அது ஒரு செயலில்லா பங்கினைக் கொண்டுள்ளது. டிஎன்ஏ மூலம் குறீயிடப்படும் புரதங்கள் "வாழ்க்கையை" குறிக்கும் எண்ணற்ற செல்-எதிர்வினைகளை (Cellular reactions) செயல்ப்படுத்தும். மனித மரபணுத்தொகுதி திட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான மரபனு பட்டியலைப்பெரும் இந்நேரத்தில் "இந்த மரபணுக்களால் குறியிடப்படும் புரதங்கள் உண்மையில் என்ன செய்கின்றன?" என்பதை நாம் அறிய வேண்டும். விஞ்ஞானிகள் புரதச் செயல்பாட்டை பற்றி விளக்க மரபுபிறழ்ந்த உயிரினங்களையே ஆராய்கின்றனர். இப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட மரபுபிறழ்ந்த உயிரினத்தை யுருவாக்க, மாற்றப்பட்ட அல்லது செயல்பாட்டிழந்த மரபணு நகல்களை மீண்டும் அந்த உயிரிணத்திற்குள் புகுத்துகின்றனர். இதன் மூலம், அதன் வளர்ச்சியிலோ அல்லது நடத்தையிலோ மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். எலிகள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்வதாலும், மற்றும் அதன் 99% மரபணுக்கள் மனிதர்களைப் போல் இருப்பதாலும், அவைகள் பெரிய அளவிலான செயல்பாட்டாய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், மரபணு சோதனையென்பது மரபணு தன்னை வரிசைப்படுத்திக் கொள்வதைவிட பல மடங்கு கடினமானது. மனித மரபணுவினைப் புரிந்துகொள்ள இன்னும் ஆராய்ச்சிகள் செய்யவேண்டியுள்ளது.