அனைத்து செல்கள் முன்பே உள்ள செல்களிலிருந்து எழுகின்றன.
நூற்றாண்டுகளாக "தன்னிச்சையாக" தான் உயிர்கள் உருவாகும் என மக்கள் நம்பினர். 1800 களில் தான் இனப்பெருக்கம் மூலம் உயிர்கள் உருவாகும் என நம்பத்தொடங்கினர். செல்கள் அடிப்படை வாழ்க்கை அலகுகளாகயிருந்தால், அவைகளிடம் குரோமோசோம்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் இனப்பெருக்க அமைப்பு இருக்க வேண்டும். மெண்டலின் ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிட்ட ஒரு தசாப்ததிற்குப் பிறகு தான், விஞ்ஞானிகள், சாயங்களைக் கொண்டு உயிரணு பிரிவின் (mitosis) போது நிகழும் குரோமோசோம்களின் நடவடிக்கையை ஆவணம் செய்தனர். முதலில், ஒவ்வொரு குரோமோசோம்களும் தங்களை நகலெடுத்துக் கொள்கிறது, பிறகு அந்த நகல்கள், செல்களின் "மத்தியில்" தன்னை வரிசைப்படுத்திக் கொள்கிறது. பின்னர், ஒவ்வொரு குரோமோசோம்களின் நகல்கள் எதிர் துருவங்களை நோக்கி இழுக்கப்படுகின்றன. இறுதியாக, செல்லானது அதன் மத்தியில் பிளவடைந்து. ஒத்திய குரோமோசோம் தொகுப்பைக் கொண்ட இரண்டு புதிய செல்கள் உருவாக்கும்.