பாலியல் செல்களில் ஒன்று, மற்றும் உடல் செல்களில் இரண்டு தொகுப்பு குரோமோசோம்கள் உள்ளன.
பாலியல் இனப்பெருக்கத்தில், ஒரு பெண்ணின் முட்டை மற்றும் ஒரு ஆணின் விந்தின் சேர்க்கையிலிருந்து குழந்தை உருவாகும். மெண்டலின் ஆராய்ச்சியின் மறு ஆய்விற்கு முன், பாலியல் செல்கள் meiosis உருவாக்கத்தின் போது நிகழும் குரோமோசோம்களின் நடவடிக்கையை தீர்கமான ஆய்வுகள் நடந்தேரியது. முதலில் ஒத்திய குரோமோசோம்கள் செல்லின் மத்தியில் ஜோடியாவதன் மூலம் மரபணு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். பின்னர், ஒவ்வொரு ஜோடியிலிருந்து ஒரு குரோமோசோம் துருவத்தை நோக்கி இழுக்கப்படுகின்றன. இந்த குறைப்புப் பிரிவின் இறுதியில் எழும் ஒவ்வொரு செல்லும், அதை உருவாக்கும் செல்லிருக்கும் ஒத்திய குரோமோசோமின் ஜோடியிலிருந்து ஒரே ஒரு குரோமோசோமை மட்டுமே பெறும். ஒடுக்கற்பிரிவானது (meiosis) குரோமோசோம் தொகுப்பைப் பாதியாக்கி சீரற்ற முறையில் பாலியல் உயிரணுக்களுக்கு ஒத்திய குரோமோசோம்களை அளிக்கும். முட்டை மற்றும் விந்தணுக்களின் சேர்க்கையின் போது குரோமோசோமின் முழு எண்ணிக்கை திரும்பப் பெறப்படும். இது, மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மெண்டல் மரபணுக்களின் நடவடிக்கையைப் பிரதிபலித்தது.